பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சியில் வெளியிடப்பட்ட செய்தியில் ஜம்மு – காஷ்மீர் பகுதிகள் இல்லாமல் இந்திய வரைபடம் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சி. நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பற்றி “அமெரிக்க தேர்தல் 2020: உலக நாடுகள் ஜோ பைடனிடமிருந்து எதிர்ப்பார்ப்பது என்ன?” என்ற தலைப்பில் ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டது. அச்செய்தி தொகுப்பில் ஒளிபரப்பட்ட இந்திய வரைப்பட கிராப்பிக்ஸில் இந்திய எல்லைக்கு உட்பட்ட ஜம்மு – காஷ்மீர் எல்லைகளை சேர்க்காமல் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியைப்பார்த்த இந்தியர்களையும் மற்றும் இங்கிலாந்து வாழ் இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சர்ச்சை தொடர்பாக பிரட்டனின் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வீரேந்திர ஷர்மா பி.பி.சி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் அவர் “இந்தியாவின் முக்கிய அம்சமான ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை தெளிவாக காட்டாதது இந்தியர்களுக்கும், பிரட்டன் வாழ் இந்தியர்களுக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிபிசியில் ஒளிபரப்பு செய்த செய்தியை சரி செய்து மீண்டும் மறுஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பி.பி.சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ”நாங்கள் லண்டனில் இருந்து தவறான இந்திய வரைப்படத்தை வெளியிட்டதாகவும், அவ்வரைப்படம் பி.பி.சி நிறுவனத்தில் பயன்படுத்தபடும் வரைப்படம் இல்லை எனவும், தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்,” என மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், அச்செய்தித் தொகுப்பை சரி செய்து பி.பி.சி. மறு ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.