இயக்குநர் லிங்குசாமி சொன்னக் கதையை கேட்டு பிரபல ஹீரோ பாராட்டித் தள்ளியுள்ளார்.
ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை உட்பட சில படங்களை இயக்கியவர் லிங்குசாமி. கடைசியாக விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து தனது அடுத்தப் படத்துக்கான கதையை சில ஹீரோக்களிடம் கூறி வந்தார். அவரும் நடிகர் ராகவா லாரன்ஸும் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.பிறகு அந்தப் படம் தொடங்கப்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். ராம், தமிழில் உருவான ’அடையாளம்’ என்ற குறும்படம் மூலமாக நடிகரானவர். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம், கடைசியாக தமிழில் வெளியாகி ஹிட்டான ’தடம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார்.
லிங்குசாமி, ராம் இணையும் படத்தை, ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்க இருக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை படக்குழு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தின் முழுக் கதையையும் லிங்குசாமி, சமீபத்தில் நடிகர் ராமிடம் தெரிவித்துள்ளார். கதையை கேட்டு லிங்குசாமியை பாராட்டி தள்ளியுள்ளார், ராம்.
இதுபற்றி சமூக வலைதளத்தில், முழுக் கதையையும் கேட்டுவிட்டேன். ஐ லவ் யூ லிங்குசாமி சார். சூப்பர் டூப்பராக கதை இருந்தது என்று தெரிவித்துள்ளார் ராம் பொத்தினேனி. இதில் ராம் ஜோடியாக ’உப்பென்னா’ ஹீரோயின் கீருத்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் .