காரை நிறுத்தச் சொல்லி இன்ப அதிர்ச்சி தந்த பிரதமர்

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சாலை வழியாக சென்ற பிரதமர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் உள்ளிட்டோர்…

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சாலை வழியாக சென்ற பிரதமர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எக்ஸ் விமானப் படைத்தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சாலை மார்கமாக காரில் சென்ற பிரதமர், சாலையோரங்களில் கூடியிருந்த பாஜக தொண்டர்கள், பொதுமக்களைப் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் காரிலிருந்து இறங்கி சிரித்தப்படியே அனைவருக்கும் கையசைத்தார். இது பாஜக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

வழி நெடுகிலும் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மேள தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் பிரதமரின் கார் சாலையில் ஊர்ந்தே சென்றது. பிரதமர் வருகையை முன்னிட்டு சாலை முழுவதும் பலத்த போலீச் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.