முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த நூல் இதுதான்!

சென்னை வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். ரயில்வே, சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.

அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன்,  பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜி.கே.வாசன், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பொன்னாடை அணிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமருக்கு நூல் ஒன்றையும் அன்பளிப்பாக அளித்தார். அந்த நூலின் பெயர் திருவிளையாடல் புராணம் ஆகும். இந்த நூல் சிவபெருமான் சிறப்பை எடுத்துரைக்கும் நூல் ஆகும். இந்த நூலை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். வழக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் புத்தகத்தை பரிசளிப்பார். அவருக்கும் பலர் புத்தகத்தை பரிசளிப்பார்கள்.  அதேபோல், மத்திய இணையமைச்சர் முருகனும் புத்தகத்தை பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடுத்த வருடமும் சம்பவம் இருக்கு: சர்ப்ரைஸ் கொடுத்த தோனி

Halley Karthik

வெளிநாட்டு போதை கும்பலுடன் கைதிகள் தொடர்பு? – திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

Dinesh A

சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

EZHILARASAN D