முக்கியச் செய்திகள் தமிழகம்

விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு

சென்னை வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். 

ரயில்வே, சாலைத்  திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜி.கே.வாசன், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி வணக்கம் வைக்க அவரது கைகளைப் பிடித்து தோளைக் தட்டிக்கொடுத்து நலம் விசாரித்தார் பிரதமர். இதேபோலவே வாசனின் தோளையும் தட்டிக்கொடுத்தார். எல்.முருகன் பிரதமருக்கு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைத்தார்.அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐஎன்எக்ஸ் தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் மயில்சாமி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Web Editor

ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த மாணவன் உயிரிழப்பில் தொடரும் மர்மம்

G SaravanaKumar