முக்கியச் செய்திகள் இந்தியா

தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி; காந்தி நகரில் உடல் தகனம்

உடல் நலக்குறைவால் மறைந்த தனது தாய் ஹீராபென்னின் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார். பின்னர் காந்தி நகரில் உள்ள மயானத்தில் தாயாரின் சிதைக்கு தீமூட்டி தகனம் செய்தார். 

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தாய் ஹீராபென்னை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது தாயின் மறைவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.தனது தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தாயின் 100வது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, அவர் கூறிய அறிவுரைகள் எப்போதும் நினைவில் இருக்கிறது என பிரதமர் மோடி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படடேல் ஆறுதல் கூறினார். பின்னர், காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாய் ஹீராபென் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்து இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லும் வாகனம் வரை தாயின் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார். இதனை அடுத்து, காந்திநகர் மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. தனது தாய்க்கு பிரதமர் மோடி இறுதிச்சடங்குகளை செய்தார். பின்னர் தனது தாய் உடலுக்கு தீமூட்டினார். இந்த இறுதிச்சடங்கில் பிரதமர் மோடியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

Arivazhagan Chinnasamy

ஆவடியில் போட்டியிட விரும்புகிறேன்: அமைச்சர் பாண்டியராஜன் விருப்பம்!

Jayapriya

’வி.பி.சிங்’ பெயர் மட்டும் அல்ல, அவரின் செயல்களும் வித்தியாசமானவையே!

Arivazhagan Chinnasamy