முக்கியச் செய்திகள் இந்தியா

கடனை எப்படி சமாளிக்கிறீர்கள்; கௌதம் அதானி விளக்கம்

2 லட்சம் கோடி ரூபாய் கடனை நிர்வகிப்பது குறித்து இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.

ஆங்கில சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், 2 லட்சம் கோடி ரூபாய் கடனை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பபட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கு பதிலளித்த அதானி, நிதி நிலைமை அடிப்படையில் தனது நிறுவனம் வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

அதானி குழுமத்தின் லாப விகிதம், கடந்த 9 ஆண்டுகளில் கடன் விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து வந்துள்ளதாக விளக்கம் அளித்த அவர், கடன் விகிதம் 7 புள்ளி 6-ல் இருந்து 3 புள்ளி 2 ஆக குறைந்திருப்பதாக கூறினார்.

அதானி குழுமம் பெற்றுள்ள மதிப்பீடு அளவுக்கு, இந்தியாவில் வேறு எந்த வணிகக் குழுமமும் பெறவில்லை என்றும் அதானி தெரிவித்தார்.

9 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது மொத்த கடன்களில் இந்திய வங்கிகளில் இருந்து பெறப்பட்டது 86 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது, இந்திய வங்கிகளில் அதானி குழுமத்திற்கு இருக்கும் கடன் அளவு 32 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெய்பீம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

G SaravanaKumar

மருத்துவர்கள், செவிலியர்கள் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடியவர் கைது

Web Editor

உட்கட்சித் தேர்தலை குழப்ப முயற்சி; கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்

EZHILARASAN D