யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும்…

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும் எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிடுகிறது.

ஆனால், மேகதாது அணை கட்டுவதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம் எனவும், அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “யானைகள் வழித்தடத்தில் மேகதாது அமைந்துள்ளதால் அந்த பகுதியில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார். இதேபோல காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணல் திட்டத்தை செயல்படுத்த கோரியும் யானை ராஜேந்திரன் மற்றொரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.