ஸ்மார்ட் சிட்டி விருதுகள் திட்டம்: சென்னை மாநகராட்சி முதலிடம்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருதுகள் திட்டத்தில், சென்னை மாநகராட்சி இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய வீட்டு வசதி நகர்புற உறவுகளுக்கான அமைச்சகத்தின் சார்பில், இந்திய ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான போட்டி ஆண்டு…

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருதுகள் திட்டத்தில், சென்னை மாநகராட்சி இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய வீட்டு வசதி நகர்புற உறவுகளுக்கான அமைச்சகத்தின் சார்பில், இந்திய ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில் கடந்த ஆண்டுக்கான போட்டியில், சென்னை உட்பட 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பங்கேற்றன. இதில் நகர்ப்புற சுற்றுச்சூழல் பிரிவில், நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் சென்னை மாநகராட்சிக்கு முதலிடத்துக்கான ஸ்மார்ட் சிட்டி விருது கிடைத்துள்ளது. கொரோனா தொற்று தடுப்பு பணியில், புதிய முயற்சிகளை செயல்படுத்திய காரணத்திற்காகவும் ,சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி முதலிடம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.