பெட்ரோல், டீசல் விலை 10ரூ குறைப்பு; இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் குறைத்தும், மின் கட்டணத்தை ஒரு யூனிட்டிற்கு 5 ரூபாய் குறைத்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை…

பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் குறைத்தும், மின் கட்டணத்தை ஒரு யூனிட்டிற்கு 5 ரூபாய் குறைத்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின், பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். இந்த போராட்டங்களுக்கு பதிலளிப்பதாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 10 ரூ குறைத்தும், மின்சார விலையை ஒரு யூனிட்டிற்கு 5 ரூ குறைத்தும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும், பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரக் கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரப்பட்ட அந்நாட்டு மக்கள் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்திவந்தனர். தொடர்ந்து எதிர்கட்சிகளும் தங்கது எதிர்ப்பை பதிவு செய்து வந்தன. இந்த நிலையில் எரிபொருட்கள் மீதான விலையை பிரதமர் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து குறைக்கப்பட்ட இந்த விலையானது நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை எந்த மாற்றம் செய்யப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலிற்கு 100 டாலாராக இருக்கும் நிலையில் இம்ரான் கானின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்பின் படி, 159.86ரூபாயாக இருந்த பெட்ரோல் விலையானது 149 ரூபாயாக குறைந்துள்ளது. டீசல் விலையானது 154.15 ரூபாயிலிருந்து 144 ரூபாயாக குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.