முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 69-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி தலைவர்களின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், அங்குள்ள அண்ணா மற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார், அவருடன் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அண்மைச் செய்தி: ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல’ – அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து
இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அப்போது அமைச்சர்கள் மற்றும் சேப்பாக்கம் – திருவலிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.