ஏப்ரல் 29-க்கு பின் பெட்ரோல், டீசல், விலை உயரும் – ராகுல் காந்தி பதிவு…!

ஏபரல் 29 ஆம் தேதிக்கு பின் பெட்ரோல் டீசல் விலை உயரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேற்காசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜல்சந்தி மீது ஈரான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தேர்தல் நிவாரணம் முடிந்தது, பணவீக்கத்தின் வெப்பம் வரவிருக்கிறது. ஏப்ரல் 29-ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல், எல்லாமே விலை உயரும்.

எண்ணெய் விலை மலிவாக இருந்தபோது, ​​மோடி அரசு லாபத்தை அள்ளிக்கொண்டது. இப்போது விலை உயர்ந்துள்ளதால், அந்தச் சுமையை உங்கள் மீது சுமத்துகிறது. விலை மலிவாக இருக்கும்போது கொள்ளையடிக்கும் ஓர் அரசு, பணவீக்கத்தின் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா,“பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.