மதுரையில் பிரபல நகைக்கடையில் 500 பவுன் நகைகள் கொள்ளை – காவல்துறை விசாரணை!

மதுரையில் பிரபல நகைக்கடையில் 500 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் புகுந்து சுமார் 500 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.