அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்! – போலோசார் விசாரணை!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.7 கோடி பணம் தராவிட்டால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மகளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஜர்னெல் சிங்குக்கு வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி மற்றும் அலைபேசி அழைப்பு மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து, ஜர்னெல் சிங் மொகாலி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள பஞ்சாப் காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.