தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம் என்ன…?

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 5 முறை உயர்ந்துள்ளது.

அதன் படி நேற்று சென்னையில் ஒரு பெட்ரோல் லிட்டர் ரூ. 107.87 – க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 99.66 – க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல டீசலும் லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.