ஐபிஎல் தொடரில் குவாலிபையர் 1 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஐதாரபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகரில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐதாரபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் நடப்பு சீசனில் இரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஏப்.13 ஆம் தேதி நடைபெற்ற முத்கல் போட்டியில் ராஜஸ்தானை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஏப்.25 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானை, ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்று நடைபொறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி மே.29 ஆம் தேதி நடைபெறும் குவாலிபையர் 2 – வில் குஜராத் அணியுடன் மோதும் என்பது குறிப்படத்தக்கது.




