ஐபிஎல் தொடரில் குவாலிபையர் 1 போட்டி நேற்று நடைபெற்றது. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலாவதாக களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 93 (33) ரன்கள் குவித்தார். அதே போல விராட் கோலி 43(25) ரன்களும், க்ருணால் பாண்டியா 43 (28) ரன்களும் விளசினர். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமான அளவு உயர்ந்தது. குஜராத் அணி சார்பில் ஹோல்டர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் தெவாட்டியா 68 (43) ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி சார்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குவாலிபையர் 1-ல் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியுற்ற குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிபையர் 2 வில் மோதும் என்பது குறிப்படத்தக்கது.







