முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பிரசாந்த் கிஷோரே வந்தாலும்…பீட்டர் அல்போன்ஸ் ஓபன் டாக்

பிரசாந்த் கிஷோரே வந்தாலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது கடினம் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் இரண்டு முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 2014ம் ஆண்டு பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. அதனைத் தொடர்ந்து 2019 தேர்தலிலும் இரட்டை இலக்க எம்.பி.க்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. பலவீனமாகவுள்ள காங்கிரஸ் கட்சியை சீரமைக்க வேண்டுமென கட்சிக்குள் இருந்தே குரல்கள் எழுந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2024 தேர்தலை சந்திக்க தற்போதே தயாரான காங்கிரஸ், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர அழைத்தது. ஆனால், அதனை நிராகரித்த பிரசாந்த் கிஷோர் கட்சியை சீரமைக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் நீயூஸ் 7 தமிழிடம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பாரம்பரியமான காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி குறைந்து வருவது வேதனையாக உள்ளது. பிரசாந்த் கிஷோரே வந்தாலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது கடினம்.” என்று தெரிவித்தார்.

10 வருடமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாதது கவலைபட கூடிய அம்சமாக இல்லை என்ற பீட்டர் அல்போன்ஸ், “காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான பலம் குறைந்துள்ளது.
நூற்றாண்டுகள் பழமையான வாகனம் தான் காங்கிரஸ் கட்சி. வாகனம் தேய்ந்துள்ளதால் வாகனத்தை புதிப்பிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அசையா சொத்துகளை விற்க ஏர் இந்தியா முடிவு!

மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்

EZHILARASAN D

உலக கோப்பை ஹாக்கி 2023; அட்டவணை வெளியீடு

G SaravanaKumar