மதுரையில் பள்ளி மாணவிகள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளிகளில் சமீப காலமாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதும், ஆசிரியர் இருக்கும்போதே ஆடிப்பாடி வீடியோ எடுத்து பதிவிடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது. அதுபோலவே, மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து சண்டையிட்டுகொள்வது நடைபெறுகிறது.
இந்த நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் இரு குழுவாக மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டனர். மாணவிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்ட நிகழ்வின் காரணமாக பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து சண்டையிட்டு கொண்ட நிகழ்வு குறித்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது. திடீர் நகர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







