தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என்பது சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய மொழிகளில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அது வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படுமே தவிர நீதியாக பார்க்கப்படாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், “நீதித்துறையில் உள்ளூர் மொழிகளை ஊக்குவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/rajbhavan_tn/status/1520413553764622338
தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்றும், அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.







