பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்

பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம்…

பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி, மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். காங்கிரசின் இந்த போராட்டத்தை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானத்தை எதிர்க்கவே, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அதே நாளில் கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.

https://twitter.com/PChidambaram_IN/status/1557596945920626689

அதேபோல, அரியானா மாநிலம், பானிபட்டில் நடந்த எத்தனால் ஆலை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என மறைமுகமாகச் சாடினார்.

அண்மைச் செய்தி: ‘இளைஞர்களை வெட்டத் துரத்திய அரசியல் கட்சி பிரமுகர்; போலீஸ் விசாரணை!’

இந்தநிலையில், இதற்கு ட்விட்டடில் பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதன வாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்” எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/PChidambaram_IN/status/1557588883579162624

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.