இளைஞர்களை வெட்டத் துரத்திய அரசியல் கட்சி பிரமுகர்; போலீஸ் விசாரணை!

திருச்சி சிறுகனூர் அருகே திமுக பிரமுகர் பட்டப்பகலில் இளைஞர்களை ஓட ஓட அறிவாளால் வெட்டத் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி சிறுகனூர் மற்றும் மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் அருகே உள்ள…

திருச்சி சிறுகனூர் அருகே திமுக பிரமுகர் பட்டப்பகலில் இளைஞர்களை ஓட ஓட அறிவாளால் வெட்டத் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

திருச்சி சிறுகனூர் மற்றும் மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் அருகே உள்ள தெற்கு தத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் வெற்றி செல்வனுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குணசேகரனிடம் வெற்றி செல்வன் வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்காமல் பலமுறை அலைக்கழித்துள்ளார். இந்நிலையில், குணசேகரனின் நண்பர்கள் திமுக கவுன்சிலர் நித்தியாவிடம் சென்று உங்களது கணவர் எங்கே? அவர் வாங்கிய பணத்தைத் திருப்பி வழங்கச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால், நித்யா அவர் வீட்டில் இல்லை என்று கூறவே பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் தொடர்ந்து பிரச்சினை செய்வது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘QR கோடு ஸ்டிக்கர் மூலம் பணம் மோசடி; வாலிபர் கைது!’

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரிக்க வீட்டிற்குள் இருந்த வெற்றிச்செல்வன் வெளியே வந்து இளைஞர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அறிவாளால் துரத்தித் துரத்தி வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, தயவு செய்து கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மனைவியும், உறவினர்களும் கூச்சலிட்ட போதும் வெற்றி செல்வன் அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து இளைஞர்களை ஓட ஓட விரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வேகமாகப் பரவி வருவதால், சிறுகனூர் போலீசார் வெற்றிச்செல்வனை கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.