பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளி என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும் பொழுது 10க்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்கு வெடிகுண்டு வீசி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5 தனிப்படைகளை அமைத்த பெரம்பலூர் மாவட்ட போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில் அழகுதுறை என்பவரை நேற்று மாலை கைது செய்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அழகுராஜா தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவற்காக போலீசார் அழைத்துச் சென்றபோது திடீரென, போலீசார் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிய அழகுராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ் ஐ சங்கர் என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அழகுராஜா உயிரிழந்துள்ளார். காயமடைந்த எஸ்ஐ சங்கர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.







