சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபரிடமிருந்து பணத்தை பெற்று தர கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ராமர் என்பவர் அறக்கட்டளை நடத்தி அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் மாத சீட்டு நடத்தி வந்தார். மாதம் தோறும் சீட்டு சேர்ப்பவர்களிடம் பணம் பெற்று குலுக்கல் முறையில் பணம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல், சீட்டு பணம் எடுத்தவர்களுக்கு முறையாக சீட்டு பணம் கொடுக்கவில்லை. சீட்டு நடத்திய பணத்தில் நிலம் வாங்கி போட்டதாகவும் அதிக பணம் கொடுத்தவர்களுக்கு நிலத்தை பங்கிட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் பணம்
கொடுத்தவர்கள் கேட்கவே, கம்பெனி நடத்திய ராமர் என்பவர் சென்னைக்கு சென்று தலைமறைவானார்.
இந்நிலையில் பல கோடி ரூபாய் பணம் திருப்பிக் கொடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒரு சிலர் இன்று மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணத்தை பெற்று தரும்படி புகார் மனு அளித்தனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







