10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து வருவதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024-இல்,
🚆 மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதி
🛣️ தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்
🧑🧑🧒🧒 பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை…
— M.K.Stalin (@mkstalin) July 21, 2024








