‘மக்கள் என்னைத் தேடி வருவார்கள்’ – சீமான்

மக்கள் தன்னை தேடி நிச்சயம் வருவார்கள், அதுவரை தான் பொறுமையாக இருந்து  கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களைக் காப்பாற்றப் போவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச்…

மக்கள் தன்னை தேடி நிச்சயம் வருவார்கள், அதுவரை தான் பொறுமையாக இருந்து  கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களைக் காப்பாற்றப் போவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவின்  ஊழல் குறித்துப் பேசும் அண்ணாமலை,10 ஆண்டுகள் கூட்டணியாக இருக்கும் அதிமுகவின் ஊழல் பற்றியும் பேச
வேண்டும் எனவும், ஊழலுக்காகச் சிறை சென்ற தலைவியின் கட்சியில் கூட்டணி வைத்த பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஊழல் குறித்துப் பேசத் தகுதி இல்லை எனத் தெரிவித்தார்.
மேலும், மக்கள் தன்னை தேடி நிச்சயம் வருவார்கள், அதுவரை தான் பொறுமையாக இருந்து  கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரமெடுத்து மக்களைக் காப்பாற்றப் போவதாகக் கூறிய அவர் பாஜகவினர் சாமியைப் பற்றியே பேசுகின்றனர். ஆனால், நாங்கள் வாழும் பூமியைப் பற்றிப் பேசுகின்றோம் எனக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூடுவது என்பது அரசின் விளையாட்டு என்றும், அதில் கருத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனக் கூறினார். மேலும், தமிழ் தேசிய அரசியல் கோட்பாடு உடைய நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி என்றும் 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும் எனத் தெரிவித்த அவர், அண்ணாமலையால் அது முடியாது உறுதிப்படத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.