திருவல்லிக்கேணி பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1,27,50,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ஜெகன்
என்பவர் இன்று காலை அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை பெரியார் சிலை அருகில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலிருந்த போது, சுமார் 9.30 மணியளவில் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணாசாலை சந்திப்பு அருகில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் 2 பைகளுடன் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகத்தின் பேரில், அவர்கள் வைத்திருந்த பைகளை திறக்க சொல்லி திறந்த போது. அதில் பெருமளவு பணம் வைத்திருந்தது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து சரியான விளக்கமும், உரிய ஆவணங்களும் இல்லாததால், காவலர் ஜெகன்
திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பிடிபட்ட 2 நபர்களையும்
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணம் மற்றும் இருசக்கர வாகனத்துடன்
ஒப்படைத்தார்.
திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்த போது, பிடிபட்ட முத்தையா என்பவர் இராயப்பேட்டை சேர்ந்தவர் என்றும், இவரது தம்பி ராஜா என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள்
கொண்டு வந்த சூட்கேசுகளில் ரூ.1,27,50,000 பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் சௌகார்பேட்டையில் பித்தளை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்ற பணத்திற்கு உண்டான ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், பிடிபட்ட இருவரும், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம் ரூ.1,27,50,000 மற்றும் இருசக்கர வாகனத்துடன் ஒப்படைக்கப்பட்டனர்.