தி லெஜண்ட் திரைப்படத்தின் மலையாளம் ட்ரைலர் வெளியானது.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தி லெஜண்ட் படத்திலிருந்து வெளிவந்த மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடி வாசல் வீடியோ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தென்னிந்தியத் திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகிகள் பலரும் கலந்து கொண்ட தி லெஜண்ட் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அப்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் வெளியானது.
இந்நிலையில், தி லெஜண்ட் படத்தின் மலையாள ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
– தினேஷ் உதய்









