அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருகிறதாகவும் ஆகையால் மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.







