முக்கியச் செய்திகள் தமிழகம்

பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

வேளாண் தொழிலை முதன்மை தொழிலாக கொண்ட தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள், போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில், சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணும் விழாவான போகி பண்டிகை கொண்டாடபடுகிறது.

இந்த போகித் திருநாளில் பொதுமக்கள் பலரும் அதிகாலை முதலே பழைய பொருட்களை வீட்டின் முன் வைத்து எரித்து, போகி கொண்டாட்டத்தை பெரும் உற்சாகத்துட்ன் தொடங்கினர். சிறுவர்கள் மேளம் அடித்தபடி உற்சாகத்துடன் வலம் வந்தனர்.

இந்நிலையில், டயர் மற்றும் நெகிழிப் பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ரூ. 1000 அபராதமாக விதிக்கப்படும் எனவும், இதற்கு பதிலாக மரக்கன்றுகளை நட்டு இந்த பண்டிகையை கொண்டாடலாம் எனவும் தமிழ்நாட்டு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

இந்த நாளில் மக்கள் அனைவரும் பொருட்களை எரித்து கொண்டாடியதால், சாலைகள் அனைத்தும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், மாசற்ற போகி பண்டிகையை கொண்டாடும் படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

Vandhana

”வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கினேன்”- நடராஜன்!

Jayapriya

சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் நெகிழ்ச்சி உரை!

Niruban Chakkaaravarthi