முக்கியச் செய்திகள் குற்றம்

கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி தற்கொலை முயற்சி

கல்விக் கட்டணத்தை செலுத்தாததால், ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும் இதனால் மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து
வருகின்றனர். இங்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும் , அதை கட்டத் தவறிய பள்ளி மாணவ மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டி துன்புறுத்துவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த பள்ளியில், திசைவிளக்கு பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி கட்டணத்தை செலுத்தாததால், ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மாணவிகளை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவி தரப்பில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தாய் கூறுகையில் தாங்கள் விவசாய கூலிவேலை செய்து இரண்டு குழந்தைகளை சுவாமி விவேகானந்தா தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பணம் கட்ட சொல்லி பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை அடித்ததாகவும் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் இதனால் மனமுடைந்து தனது மகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு என்பதால் பணம் கட்டவில்லை என்றால் முழு தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று மிரட்டியதால், மகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எந்த குழந்தைகளையும் தாக்கவில்லை, மிரட்டவில்லை என்றும் சம்பந்தப்பட்ட மாணவ மாணவியர் இருவருக்கும் இதுவரை இந்த ஆண்டுக்கான பள்ளி கட்டணம் 300 ரூபாய் மட்டுமே செலுத்தி உள்ளதாகவும், பள்ளி கட்டண தொகை கட்ட முடியாது என சம்மந்தப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும், இதற்கு உண்டான வீடியோ ஆதாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணி இன்று மோதல்!

Halley Karthik

யாசகம் கேட்கும் பெண்; மனதை உருக்கும் வீடியோ!

Jayapriya

இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா

Vandhana