கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் வீணை வடிவத்தில் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தின்கீழ் அவர் கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடலுக்குள் அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம், சிக்குக்கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளதாகவும், கருணாநிதி நினைவிடத்திலிருந்து பேனா நினைவுச்சின்னத்திற்கு செல்லும் பாலம் கடல் அலை வடிவத்தில் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழின் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் இயல், இசை, நாடகம் மற்றும் கருணாநிதியின் கருத்துகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பிரதிபலிக்கும்படி ஒரு வீணை வடிவத்தில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொதுப்பணித்துறை, பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி படத்தை வெளியிட்டுள்ளது.