மயில் சிலை வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர் சன்னதியில் மாயமான மயில் சிலை குறித்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பது தெரியவந்துள்ளதால், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவும், அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

“சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை வரும் 16-ந்தேதி வரை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் பிரத்யேக நேரலையாக காணலாம்”

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணையை முடிக்க ஆறு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளது. மயில் சிலை மாயமானது குறித்த வழக்கு விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துதரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 2-வது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.