மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் தீர்த்தவாரி வைபவத்துக்காக, பாரம்பரியமாக காரியாபட்டியில் தயாராகும் தோல் பைகள் குறித்தும், இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தினர்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பாரம்பரியம் மிக்க சித்திரை திருவிழா மதுரையின் அடையாளங்களில் ஒன்று. இத்தைகைய பாரம்பரியம் மிக்க திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு மீண்டும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வேடமிட்டு பக்தர்கள் மாலை அணிந்து தண்ணீர் பீச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும். இதற்காக தோல் பைகளை கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் பயன்படுத்துவார்கள்.
அண்மைச் செய்தி: சொத்துவரி விவகாரம்; அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பைகளை தயாரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரியமாக பாட்டன் காலத்தில் இருந்து வாடிக்கையாக தோல் பை தயாரிப்பில் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் அந்த தொழில் மேற்கொள்ளுபவர்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் சுமார் 1000 முதல் 2000 ஆட்டு தோல் பைகள் தயார் செய்து மதுரை சித்திரை திருவிழா விற்பனைக்காக கொண்டு செல்ல இருப்பதாக தெரிவிக்கும் மக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இத்தொழிலில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: