“அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய அனுபவமே சிறப்பாக செயல்பட உதவியது!” – ஜஸ்பிரித் பும்ரா கருத்து

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த காலங்களில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான…

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த காலங்களில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். 7 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த காலங்களில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது:

இந்த அகமதாபாத் மைதானத்தில் நான் நிறைய ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை போட்டியின்போது செயல்படுத்த முயற்சி செய்தேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.