நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் இயக்குநர் லோகேஷும், இசையமைப்பாளர் அனிரூத் தும் இணைந்துள்ள புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 09.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 01.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளது.
லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படத்தை காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடிகை த்ரிஷா ‘லியோ’ படத்திற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதேபோல் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ‘Locked & Loaded’ என்று தலைப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் படங்கள் இருக்கும் ஒவ்வொரு போஸ்டரையுமே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
https://twitter.com/Dir_Lokesh/status/1713508867240587408
தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் இயக்குநர் லோகேஷும், இசையமைப்பாளர் அனிரூத்தும் கை கோர்த்தது போன்று இடம் பெற்றுள்ளது. இதேபோல நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, அனிரூத் இசையமைத்த ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகும் முன்பு இதுபோன்ற போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.







