ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.47 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு நேற்றய நிலவரப்படி ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,77,150 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என, ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறித்தியுள்ளது. இந்த அபராதத்தை ரயில் நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆகியோர் வசூலிப்பார்கள், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







