தொழிற்துறைகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை மருத்துவ துறைக்கு பயன்படுத்துமாறு மத்திய அரசு, மாநில முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாநில அரசுகள் ஆக்சிஜன் தேவை குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்தும், அதன் தேவையை வலியுறுத்தியும் கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து தொழிற்துறைகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை மருத்துவ துறைக்கு பயன்படுத்துமாறு மத்திய அரசு தமிழகம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, உ.பி, சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2,61,500 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,47,88,109ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,77,150 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







