கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த ரயில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட ரயில்வே துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக ரயிலில் பற்றியெரிந்த தீயை அணைத்தனர். மற்ற பெட்டிகளை இன்ஜின் பொருத்தி அகற்றியதால், தீ மேன்மேலும் பரவாதவண்ணம் தடுக்கப்பட்டது. ரயிலின் ஒரு பெட்டி மட்டும் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமாகின.
இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள பாரத் பெட்ரோல் கிடங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ரயில்வே போலிசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் பெட்டி தீப்பிடித்து எரியத் தொடங்கிய நேரத்தில், பெட்டியின் அருகே மர்ம நபர் ஒருவர் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : கேன்ஸ் திரைப்பட விழா 2023 – அதிக கவனம் ஈர்த்த பிரபலங்கள்!!
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்திற்கும், இன்று ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பா இருக்கிறது?? சிசிடிவியின் பதிவான மர்ம நபர் யார்?? என்று போலீசார் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.







