நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளன. இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளை மீறி அவர்கள் ட்விட்டரில் பதிவிடுவதாக மத்திய அரசு விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவர்களது கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம் ; கழுத்தை நெரிப்பது அல்ல என்று கூறியுள்ளார். சீமான் உள்ளிட்டோரின் ட்விட்டர் முடக்கத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுடைய சமூக வலைத்தளத்தை தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








