விமான நிலையத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

மதுரையில் விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல வந்த பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் அருகே தாசில்தார் நகரை சேர்ந்த குமரேச பாண்டியன் (வயது72). இவர்…

மதுரையில் விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல வந்த பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணாநகர் அருகே தாசில்தார் நகரை சேர்ந்த குமரேச பாண்டியன் (வயது72). இவர் அவர்களது மகளுடன் மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பிறகு மும்பை செல்வதற்காக விமான நிலைய பயணிகள் காத்திருக்கும் அறையில் காத்திருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து முதலுதவி அளித்தனர். ஆனால் முதலுதவி சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிக்கிசைக்கு அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமான நிலைய மருத்துவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் குமரேச பாண்டியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டாக அவரை பரிசோத்த அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். மும்பை செல்ல வந்த பயணி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.