“வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி” – ராகுல் காந்தி!

தமிழ்நாட்டு மக்களின் நலன், கண்ணியம், கனவுகளை நினைவாக்க நாம் இணைந்து பாடுபடுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், “எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் மாண்புகளைக் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன். சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்க்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடரபாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு மனமார்ந்த நன்றி. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், அரசியலமைப்புக்கு அளித்த உறுதிமொழியிலும் நாம் தொடர்ந்து உறுதியாக இருப்போம். தமிழ்நாட்டு மக்களின் நலன், கண்ணியம், கனவுகளை நினைவாக்க நாம் இணைந்து பாடுபடுவோம்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.