திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி சிவன், ஸ்ரீ எல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம்…

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி சிவன், ஸ்ரீ எல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து பன்னிக்குண்டு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி சிவன், எல்லம்மாள், கொடி வைரன் திருக்கோயில்களில், குடமுழுக்கு விழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. இத்திருக்கோயில் முன்பு,  முன்னதாக வேத விற்பன்னர்கள் யாகசாலையில் குடமுழுக்கு செய்ய வேண்டிய கலசங்களுக்கு, தீர்த்தங்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி, நான்கு கால பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதி நடைபெற்ற பின்பு , பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தைக் குடங்களில் சுமந்து கோயில் மேல் உள்ள கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சம்ப்ரோசணம் செய்து குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவைக் காண திருமங்கலம், கல்லுப்பட்டி , கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேலும் இவ்விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.