பங்குனி ஆராட்டு விழா – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படவுள்ளது.

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் இரண்டாம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

அதன்படி, ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.

பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.