சிக்கனை விட பன்னீர் சிறந்தது என்று ஒருவர் பதிவிட்ட ட்வீட்டால், ட்விட்டரில் பன்னீர் ஆதரவாளர்கள், சிக்கன் ஆதரவாளர்கள் இடையே கருத்துப் போர் வெடித்துள்ளது.
மனிதன் உயிர்வாழ உணவு அத்தியாவசியம் என்றாலும், அந்த உணவை ருசியாக சாப்பிட வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புவது வழக்கம். அவரவருக்கென்று பிடித்த உணவு வகைகளை அதிகம் விரும்பி உண்பதும் நடைமுறையே. நமக்குப் பிடித்த உணவு வகைகளை பிறரிடம் கூறும்போது, அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதையும், சிலர் மாற்றுக் கருத்து தெரிவிப்பதையும் பார்க்க முடியும். அந்த வகையில், ட்விட்டர் பயனர் ஒருவர் தனக்கு பிடித்த உணவைப் பற்றி பதிவிட்ட ட்வீட் ஒன்று, கருத்துப் போரை கிளப்பியுள்ளது.
தான்யா பரத்வாஜ் எனும் ட்விட்டர் பயனர், தனது ட்விட்டர் பக்கத்தில், சப்பாத்தியும் பன்னீரும் தட்டில் இருக்க, அருகில் ஒரு கப் டீ இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, ”சிக்கனை விட பன்னீர் சிறந்தது” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட், 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2,500க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து, வேகமாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை….
இந்த ஒரு ட்வீட், ட்விட்டரில் கருத்துப் போரையும் தூண்டிவிட்டுள்ளது. தான்யா பரத்வாஜின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பயனர்கள் சிலர், “ஆம், அது உண்மைதான்” என்றும், “நானும் சிக்கனை விட பன்னீரை தான் அதிகம் விரும்புகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளனர். அதே நேரத்தில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிக்கன் விரும்பிகள், “பன்னீரில் அதிக புரதச் சத்து இருக்கலாம், ஆனால் சிக்கன் தான் சிறந்தது” என்றும், “பன்னீர் ஒருபோதும் சிக்கனைவிட சிறந்தது அல்ல, நீங்கள் மிகைப்படுத்தப்படுத்தி கூறுகிறீர்கள்” என்றும் தெரிவித்துள்ளனர்.







