பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு நாட்கள் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் 3 கோடியே 80 லட்சத்து 45ஆயிரத்து 807 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். இதில் தங்கம் 855 கிராமும், வெள்ளி 10,631 கிராமும், வெளிநாட்டு கரன்சி 574 நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன. இந்த காணிக்கைகள் அனைத்தும் கடந்த 20 நாட்களில் கிடைத்த வருவாயாகும்.
உண்டியல் எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் அறங்காவவர் குழுவினர் மற்றும் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை பணியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.