பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் நியூஸ்7 தமிழின் “தமிழ் ரத்னா” விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது.
பொறுப்புடனும் பொதுநலத்துடனும் செயல்படும் நியூஸ்7 தமிழ், பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தும் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ”தமிழ் ரத்னா” விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியல், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதி செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் இருந்து, கலை ரத்னா, இலக்கிய ரத்னா, இசை ரத்னா, விளையாட்டு ரத்னா, வேளாண் ரத்னா, சேவை ரத்னா, தொழில் ரத்னா ஆகிய விருதுகளோடு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சக்தி ரத்னா விருதுக்கான ஆளுமைகளையும் நடுவர்கள் குழு தேர்வு செய்தது, இதனைத்தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.கல்லூரி பள்ளி வளாகத்தில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் இன்று மாலை மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.