சேகுவேராவின் மகளான அலெய்டா குவேராவிற்கு ’கௌரியம்மா சர்வதேச விருதினை’ கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கி கௌரவித்தார்.
கேரளாவில் உள்ள கே.ஆர்.கௌரியம்மா அறக்கட்டளை சார்பாக ”கே.ஆர்.கௌரியம்மா சர்வதேச விருது” வழங்க தீர்மானிக்கப்பட்டு அதற்காக விருதினை பரிந்த்துரைக்கும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி, நாடாளுமன்ற உறுப்பினர் பினய் விஸ்வாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
”கே.ஆர்.கௌரியம்மா சர்வதேச விருது”-ன் முதல் விருதிற்கு குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளரும், உலகம் அறிந்த கியூப புரட்சியாளரான சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்விருது விழா கடந்த வியாழக்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சேகுவேராவின் மகளான அலெய்டா குவேராவிற்கு முதல் ’கௌரியம்மா சர்வதேச விருதினை’ கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கி கௌரவித்தார்.
விருதுடன் சேர்த்து பரிசுத் தொகையாக 3000 அமெரிக்க டாலர்களையும் கேரள முதலமைச்சர் வழங்கினார். மறைந்த கே.ஆர்.கௌரியம்மா கேரளாவில் பிரபலமாக அறியப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர் மற்றும் கேரள அரசின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.