பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவில் இருந்து விரைவில் நலம்பெறவேண்டும் என இந்திய பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையெடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகத் தகவல் வெளியாகியது. இதனையறிந்த பிரதமர் மோடி, இம்ரான் கான் விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







