GOLD RATE | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

தங்கம் விலையானது நாள் தோறும் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. திங்கள் கிழமையான நேற்று தங்கம் விலையானது, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,440-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.